மகாராஷ்டிரத்தில் தனக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பழமை வாய்ந்த ஜெய் பிரபா ஸ்டூடியோவை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும் மாநில அரசின் முடிவுக்கு தடை விதிக்கக்கோரி, பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
இது தொடர்பான மனு நீதிபதி அபய் ஒகா தலைமையிலான அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது, பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் இந்த மனு மீது உரிய பதிலளிக்க வேண்டும் என மாநில அரசுக்கும், கோலாப்பூர் நகராட்சிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
82 வயதான லதா மங்கேஷ்கர் தனது மனுவில், மகாராஷ்டிர அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
1959ஆம் ஆண்டு மராத்தி படத் தயாரிப்பாளர் பால்ஜி பெந்தர்கரிடம் இருந்த 13 ஏக்கர் மனையை லதா மங்கேஷ்கர் வாங்கியிருந்தார். அதில், ஜெய் பிரபா திரைப்பட ஸ்டூடியோ கட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment