கர்நாடக மாநிலம், யஷ்வந்தபூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென் மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழாக்கால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, யஷ்வந்தபூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு சிறபு ரயில் இயக்கப்படுகிறது.
யஷ்வந்தபூர்- ஜெய்ப்பூர் விரைவு சிறப்பு ரயில் (எண்-06551) யஷ்வந்தபூரில் இருந்து இன்று காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, 24-ஆம் தேதி காலை 10.35 மணிக்கு ஜெய்பூர் சென்றடையும். இதேபோல, மறு மார்க்கத்தில் ஜெய்ப்பூர்- யஷ்வந்தபூர் (எண்-06552) விரைவு சிறப்பு ரயில் ஜெய்ப்பூரில் இருந்து வருகிற 24-ஆம் தேதி இரவு 10.05 மணிக்குப் புறப்பட்டு, 27-ஆம் தேதி பெங்களூரு யஷ்வந்தபூருக்கு வந்தடையும்.
இந்த ரயில் யஷ்வந்தபூரில் இருந்து பெல்லாரி, வாடி, வசை சாலை, சந்தேரியா வழியாக ஜெய்ப்பூர் சென்றடையும். ரயிலில் ஒரு ஈரடுக்கு குளிரூட்டப்பட்டப் பெட்டியும், மூன்றடுக்கு குளிரூட்டப்பட்டப் பெட்டிகள் மூன்றும், இரண்டாம் வகுப்பு படுக்கைப் பெட்டிகள் ஆறும், இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் ஆறும், சரக்குப் பெட்டிகள் இரண்டும் இடம் பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment