ஏடிஎம் மையத்தில் மர்மநபரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஜோதி உதய், சிகிச்சை முடிந்து சனிக்கிழமை வீடு திரும்பினார்.
கடந்த நவ.19-ஆம்தேதி பெங்களூருவில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி ஊழியர் ஜோதி உதயை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியை காட்டிமிரட்டியதோடு, அரிவாளால் தலையில் வெட்டி தப்பியோடிவிட்டார். இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்தில்படுகாயமடைந்த ஜோதி உதய், பி.ஜி.எஸ்.மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து ஜோதி உதய் சனிக்கிழமை வீடுதிரும்பினார்.
அப்போது ஜோதி உதய் கூறியது: வீட்டில் இருந்துவேலைக்கு செல்வதற்காக கணவரின் ஸ்கூட்டரில் வந்திறங்கி, ஏடிஎம் மையம் சென்று மகளின் பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக பணம் எடுக்க முயன்றேன். அப்போது திடீரென ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்மநபர் பணம் தருமாறு கேட்டு என்னை மிரட்டினார். என்னிடம் பணம் எதுவும் இல்லை என்றேன். துப்பாக்கியை காட்டிய மிரட்டிய அந்தநபர், அரிவாளால் தலையில் வெட்டினார். நான் செத்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அரைமணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து, சக ஊழியரை அழைக்கமுயன்றேன், கூச்சலிட்டேன்.
யாரும் செவிமடுக்கவில்லை. ரத்தம் சொட்டசொட்ட கடும் சிரமத்திற்கு பிறகு இரும்புக்கதவை தட்டினேன். யாரும் உதவிக்கு வராத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் என்னை மீட்டு மருத்துவமனையில்சேர்த்தார். அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை. எதிர்பாராத இச்சம்பவம் யாருக்கும் ஏற்படக்கூடாது. என்னை தாக்கிய குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றார் அவர்.
மருத்துவமனை துணைத்தலைவர் வெங்கட்ரமணா கூறியதாவது:
இன்னும் 2-3 மாதங்களுக்கு ஜோதி ஓய்வுஎடுத்தால், அதன்பிறகு வேலைக்கு திரும்பலாம். பல அறுவைசிகிச்சைகள் செய்துள்ளோம். ஜோதியின் தன்னம்பிக்கையால் விரைவில் குணமாகியிருக்கிறார்.அவருக்கு தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment