9.12.13

மிஸோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை

மிஸோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (டிசம்பர் 9) நடைபெறுகிறது.
மாநிலத்திலுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 6 பெண்கள் உள்பட மொத்தம் 142 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து மாநில துணை தலைமைத் தேர்தல் ஆணையர் லலேங்வாவியா கூறுகையில், ""வாக்குகள் எண்ணப்படவுள்ள 8 மாவட்டங்களிலும் விரிவாôன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய தலைமை தேர்தல் ஆணைய இயக்குநர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் தேர்தல் அதிகாரிகள் அடங்கிய குழு, வாக்கு மையங்களுக்கு நேரடியாக சென்று காண்காணிக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்'' என்றார். ஆளும் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் மிúஸா தேசிய முண்ணனி கட்சி 31 இடங்களிலும், úஸாரம் தேசியவாதக் கட்சி 38 இடங்களிலும், மிúஸா மக்கள் மாநாட்டுக் கட்சி 8 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
முதல்வர் லால்தான்ஹாவ்லா தனது சொந்த மாவட்டமான செர்ச்சிப்பிலுள்ள, செர்ச்சிப் மற்றும் ஹராங்டுர்úஸா ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டார்.
எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சோரம்தங்கா, மாநிலத்தின் கிழக்குப் பகுதியான துய்பூய் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment