9.12.13

மக்களின் நம்பிக்கையே ஏற்காடு தேர்தலின் முடிவு



ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி. ராஜா கூறினார்.
இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
"ஏற்காடு இடைத்தேர்தல் முடிவு அதிமுகவுக்கு மாபெரும் வெற்றியை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதிமுக அரசு மீதும் முதல்வர் ஜெயலலிதா மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக இம் முடிவு அமைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஏற்காடு இடைத்தேர்தல் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வந்தது. ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள் நல்ல முடிவை அளித்துள்ளனர்.
தில்லி உள்ளிட்ட நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளும் காங்கிரஸýக்கு சிறந்த படிப்பினையைத் தந்துள்ளது. தலைநகரைப் பொருத்தவரை, இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸýக்கும், பாஜகவுக்கும் மாற்றாக ஒரு கட்சி வர வேண்டும் என மக்கள் விரும்பினர். இந்த இரு கட்சிகளுக்கும் எதிராக மக்கள் திரும்பியதால்தான், அவர்களின் வாக்குகள் ஆம் ஆத்மிக்கு சென்றுள்ளது. எனவே, தில்லி தேர்தல் முடிவை பாஜக தனக்கு சாதமாகக் கருதக் கூடாது. அவை காங்கிரஸýக்கு எதிராகவும் தலைநகரில் மாற்றத்துக்கு சாதகமாகவும் விழுந்த வாக்குகளாகும். ஒட்டுமொத்தமாக இத் தேர்தல் முடிவுகள் மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களின் தாக்கம்' என்றார் டி. ராஜா.

No comments:

Post a Comment