12.12.13

இந்திய ரயில்வேயிடம் ஆலோசனை கேட்கிறது பாகிஸ்தான்

நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தானின் ரயில்வே துறையை சீரமைப்பதற்கான உதவிகளையும், ஆலோசனைகளையும் இந்திய ரயில்வே வழங்க வேண்டுமென்று பாகிஸ்தான் கோரியுள்ளது.
இதற்கென பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டு ரயில்வேத்துறை அமைச்சர் க்வாஜா ரஃபீக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ""பாகிஸ்தான் ரயில்வேயை பொருளாதார ரீதியில் வெற்றிகரமாக நடத்துவதற்கு இந்திய ரயில்வேயின் உதவியும், வழிகாட்டுதலும் தேவை. அண்டை நாடுகளுடன், குறிப்பாக இந்தியாவுடனான பகைமை உணர்வை பாகிஸ்தான் கைவிட வேண்டிய காலமிது. உலக நாடுகளெல்லாம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பகைமையை மறந்து வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. ஆனால் பகையுணர்வு காரணமாக வளர்ந்த நாடுகளைவிட நாம் 200 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்.
தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் வாகா எல்லை வழியாக நடைபெறுகிறது. அதற்கு பதிலாக கோக்ராபூர்-மொனாபாவ் சாலையைப் பயன்படுத்தினால் இருதரப்பு வர்த்தகம் ஐந்து மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment