12.12.13

வலுவிழந்தது புயல்: தமிழகத்தை நோக்கி நகர்கிறது

வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த மாதி புயல், வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) முதல் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மாதி புயல் வலுவிழந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
அது தற்போது சென்னையில் இருந்து 340 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அது மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

No comments:

Post a Comment