12.12.13

சர்வதேச சிந்தனையாளர்கள் பட்டியலில் கேஜரிவால்




இந்த ஆண்டுக்கான சர்வதேச சிந்தனையாளர்கள் எனும் 100 பேர் கொண்ட பட்டியலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் 32-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "ஃபாரின் பாலிசி' என்ற பத்திரிகை இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகப் போராடிய ஊர்வசி புடாலியா மற்றும் கவிதா கிருஷ்ணன் ஆகியோர் 77-வது இடத்தைப் பிடித்தனர். இவர்களைத் தவிர இப்பட்டியலில் மேலும் 4 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடென் முதலிடத்தைப் பிடித்தார்.
பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த மலாலா யூசுப்சாய், 71-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே, ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானி, போப் பிரான்சிஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸாகெர்பர்க், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment