12.12.13

ஜான் கெர்ரியுடன் சுஜாதா சிங் சந்திப்பு

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சுஜாதா சிங், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை சந்தித்தார்.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள், ஆசிய பிராந்தியம் மற்றும் ஆப்கன், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்
கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கெர்ரியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வின்டி ஷெர்மன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் ஆகியோரை சுஜாதா சிங் சந்தித்தார்.
ஆப்கன் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இச்சுற்றுப்பயணத்துக்குப் பின், இரு நாடுகளுக்கு இடையேயான எரிசக்தித் துறை குறித்த பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆப்கன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு சந்திப்பு அடுத்த மாதம் தில்லியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment