7.12.13

தமிழ் நாட்டில் 200 தியேட்டர்களில் தூம் 3 ரிலீஸ்

அமீர்கான், அபிஷேக் பச்சன். உதய் சோப்ரா, கத்ரீனா கைப் நடித்துள்ள தூம் 3 வருகிற 20ம் இந்தியா முழுவதும் ரிலீசாகிறது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா டைரக்ட் செய்துள்ள இந்தப் படத்தை யாஷ் சோப்ரா பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.
ஏற்கெனவே படத்தின் பாடல்கள் ஹிட்டடித்துள்ள நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
தமிழ் நாட்டில் தமிழில் டப் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. 150 தியேட்டர்களை புக் செய்து விட்டார்கள். 200 தியேட்டர்களில் வெளியிட திட்டம் வைத்திருக்கிறார்கள். 100 தியேட்டர்களில் தமிழ் டப் வெர்ஷனும் மற்ற தியேட்டர்களில் இந்தி வர்ஷனும் திரையிடுகிறார்கள்.
தமிழ் நாட்டில் தூம் 2க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல இதற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். படம் ரிலீசாகும் முதல்வாரத்திலேய 300 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment