7.12.13

மோடி பிரதமராக பாபர் மசூதி வழக்கு மனுதாரர் ஆதரவு

நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க பாபர் மசூதி வழக்கைத் தொடர்ந்த பழைய மனுதாரர் முகமது ஹசீம் அன்சாரி ஆதரவு தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய ராமர் கோவில் - பாபர் மசூதி இடிப்பின் 21வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
மோடி பிரதமர் பதவியை ஏற்றால் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிர்விளைவுகள் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சி தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் ஆதரவு அளித்தனர். அதற்கு அக்கட்சி முஸ்லிம்களுக்கு பல்வேறு மதக்கலவரங்களைத்தான் பரிசாக வழங்கியுள்ளது.
நாட்டின் பிரமதராவதற்கு முஸ்லிம் சமுதாயத்தினரின் முழு ஆதரவு மோடிக்கு தேவை. குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் வளமாக வாழ்ந்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 100க்கும் அதிகமான மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அந்தக் கட்சியும் காங்கிரஸின் வழியில்தான் செல்கிறது என்று அன்சாரி கூறினார்.

No comments:

Post a Comment