7.12.13

ஹிலாரி, பிடன் இருவரும் அதிபராகும் தகுதியுடையவர்கள்



அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நாட்டின் அதிபராக வரக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு ஒபாமா வியாழக்கிழமை பேட்டியளிக்கையில், பிடன் மற்றும் ஹிலாரி ஆகியோரில் யார் அதிபராவதற்கான தகுதியுடையவர்கள் என்று கேட்டபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். வரும் 2016இல் நடைபெறும் அதிபர் தேர்தலில், 66 வயதாகும் ஹிலாரியும், 71 வயது பிடனும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாக பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் நிலையில் அதிபர் ஒபாமா இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் ஒபாமா கூறுகையில், ""அமெரிக்க வரலாற்றில் சிறந்த துணை அதிபராக ஜோ பிடன் விளங்கி வருவதாக நினைக்கிறேன். சில சிக்கலான பிரச்னைகளில், என்னுடன் இருக்கும் அவர் மூலம் தீர்வு காண்கிறேன். இதற்கு உதாரணமாக, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை குறிப்பிடலாம்'' என்றார்.
ஹிலாரி பற்றி ஒபாமா கூறுகையில், ""ஹிலாரியைப் போல சிறந்த வெளியுறவுத்துறை அமைச்சரை அமெரிக்கா பெற்றிருக்கவில்லை. அமெரிக்க வெளியுறவு விவகாரங்களில் அவரது திறமையான நடவடிக்கை பெரிதும் உதவியுள்ளது'' என்றார்.
மேலும், வெவ்வேறு திறமைகளைக் கொண்டிருக்கும் இருவரும் அவரவர் துறைகளில் தனித்துவத்துடன் விளங்குகின்றனர் என்றும் ஒபாமா பாராட்டினார்.

No comments:

Post a Comment