7.12.13

மலாலாவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் விருது


பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு மனித உரிமைகளுக்கான 2013ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அமைப்பின் விருது வழங்கப்பட்டுள்ளது.
அடிமைகளின் விடுதலைக்காகப் போராடிய மொரிதானியாவைச் சேர்ந்த பிரம் டா அபீட், அடித்தட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் கொசோவாவைச் சேர்ந்த ஹில்ஜிமினிஜேதா அபுக் ஆகியோருக்கும் மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பின்லாந்தைச் சேர்ந்த உலக காது கேளாதோர் அமைப்பின் தலைவர் லீசா காப்பியன், மொராக்கோவின் மனித உரிமைகள் கூட்டமைப்பின் முன்னாள் அதிபர் காடிஜா ரியாடி ஆகியோருக்கும் ஐ.நா. விருது கிடைத்துள்ளது.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு, அதிலிருந்து பிறகு உயிர்தப்பினார். இந்த விருதைப் பெற்றவர்களில், தென் ஆப்பிரிக்காவின் மறைந்த அதிபர் நெல்சன் மண்டேலா மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment