7.12.13

அமெரிக்க சுகாதாரத் திட்டத்தில் முறைகேடு: ரஷியர்கள் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க சுகாதாரத் திட்டத்தில் சுமார் 15 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு நிதி மோசடியில் ஈடுபட்டதாக 40 ரஷியர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் ஐ.நா. மாஸ்கோ திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையில் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவர்கள் 49 பேர் மீதும் சுகாதாரத் திட்ட மோசடி மற்றும் அரசு நிதியைப் பெறுவதற்காக சதிச் செயலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
""ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற செயல்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்கு அமெரிக்க அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
சுகாதாரத்திட்ட பலன்களை பெறுவதற்காக வருமானத்தை குறைத்து போலிச் சான்று தயாரித்தல், அதனை வைத்து மகப்பேறு கால உதவிகள் பெறுதல் மற்றும் குழந்தை பிறப்பு உதவிகள் பெறுதல் போன்ற மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்'' என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment