14.12.13

ரூ. 2 கோடி சீட்டு மோசடி: ஆணையர் அலுவலக முன் பெண்கள் சாலை மறியல்

சென்னை பெரம்பூரில் ரூ. 2 கோடி சீட்டு மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர் ஒற்றைவாடை தெருவில் பாத்திமா என்ற பெண் அங்கு சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீட்டு பணம் செலுத்தி வந்தனராம். இந்நிலையில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த பாத்திமா, திடீரென தங்களது அலுவலகத்தை பூட்டிவிட்டனராம்.
சீட்டு பணத்தை திருப்பிக் கேட்டவர்களுக்கு, அவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்து வந்தனராம். மேலும் பணத்தை கேட்டவர்களை மிரட்டியும் வருகின்றனராம். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், போலீஸாரிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில் பணத்தை இழந்த பெண்கள் வேப்பேரியில் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். அங்கு ஆணையர் அலுவலகம் முன் ஈ.வி.கே. சம்பத் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதைப் பார்த்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள், ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment