14.12.13

மன்மோகனுடன் ஆப்கன் அதிபர் கர்சாய் சந்திப்பு



நான்கு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து மன்மோகன் சிங்கிடம் ஹமீத் கர்சாய் விளக்கினார். இந்தப் பேச்சுவார்த்தையின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஆப்கன் - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படையினரை அடுத்த ஆண்டு முதல் விலக்கி கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளதால், ஆப்கனுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று ஹமீத் கர்சாய் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளதால் பின்னர் முடிவு தெரிவிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment