14.12.13

உலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கு?- இளையராஜா கேள்வியும் கமல் பதிலும்!

உலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கிறது... இணைக்க நீங்க என்ன முயற்சி பண்றீங்க, என இளையராஜா கேட்ட கேள்விக்கு கமல் விளக்கமாக பதிலளித்தார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவைத் துவக்கி வைத்த கமல் ஹாஸனிடம் தமிழ்த் திரையுலகத்தின் ஜாம்பாவான்கள் பங்கேற்ற இந்த விழாவில் இளையராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், சூர்யா உட்பட பலர் எழுதி அனுப்பியிருந்த கேள்விகள் கேட்கப்பட்டன.
உலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கு?- இளையராஜா கேள்வியும் கமல் பதிலும்!

அனைத்துக் கேள்விகளுக்கும் தனது பாணியில் பதில் சொன்ன கமலிடம் இளையராஜா கேட்ட கேள்வி:
"உலக சினிமாவிலிருந்து தமிழ்சினிமா விலகியிருக்கு... உடம்பிலிருந்து கண்ணு தனித்து போயிருக்குமா? உலக சினிமாவுடன் தமிழ் சினிமா ஏன் ஒட்டல? ஒட்டுறதுக்கு நீங்க என்ன பண்றீங்க?"
இந்த கேள்விக்கு கமல் அளித்த பதில்: "கொஞ்சம் தமிழ் சினிமாவுக்கு ஒன்ற கண்ணு. அதை விட்ருங்க. இந்த பக்கம் பாக்குறா மாதிரி இருக்கும் ஆனா அந்த பக்கம் பாத்துகிட்டிருக்கும். அதை கேலி பண்ண கூடாது. கண்ணாடி போட்டா சரியாகிடும். நான் தனியா ஒன்னும் செய்ய முடியாது. எல்லாரும் எல்லா சினிமாவும் பாக்கணும். அதுக்கு தான் இந்த வாய்ப்பு (சர்வதேச திரைப்பட விழா).
உலக சினிமாவைப் பார்க்கும் ஒரு சாதகமாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பங்குகொள்ளும் தகுதியை இனிமேல் தான் தமிழ்சினிமா அடையவேண்டும்.
ஓரிருவரை வைத்துக்கொண்டு எத்தனை நாள் மார்தட்டிக்கொள்ளமுடியும். மொத்தமாக பார்க்கும்போது மோசமில்லை என்ற நிலை உருவாகவேண்டும். மக்களுக்குப் பிடிக்காது என்று பணப்பை வைத்திருப்பவர்கள் தயங்குவார்கள். ஆனால் இயக்கம், கேமரா என சினிமா தெரிந்தவர்கள் வரும்போது தமிழ்சினிமா மேலோங்கி நிற்கும்," என்றார்.

No comments:

Post a Comment