21.12.13

4 பயணிகள் ரயில் ரத்து

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரத்திலிருந்து செல்லும் 4 பயணிகள் ரயில்கள் டிச. 21, 22-ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் இருந்து காலை 6.35-க்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில்,  புதுச்சேரியில் இருந்து காலை 8.10-க்கு புறப்படும் புதுச்சேரி-விழுப்புரம் பயணிகள் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் விழுப்புரத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயிலும், மயிலாடுதுறையில் இருந்து மாலை 5.45-க்கு புறப்படும் மயிலாடுதுறை-விழுப்புரம் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment