21.12.13

கங்குலியை நீக்க அட்டார்னி ஜெனரல் ஒப்புதல்?



பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலியை மேற்கு வங்க மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் யோசனைக்கு அட்டார்னி ஜெனரல் வாஹனவதி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சட்ட அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் இதற்கு ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில், விதிமுறைகளின்படி அட்டார்னி ஜெனரல் வாஹனவதியின் கருத்து கேட்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, "முன்னாள் நீதிபதி கங்குலிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கலாம்' என்று வாஹனவதி கூறியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கங்குலி மீதான குற்றச்சாட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் அறிக்கையில், "ஏற்கத்தகாத முறையில் அந்தப் பெண்ணிடம் கங்குலி நடந்துகொண்டது குறித்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment