21.12.13

காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை வேண்டும்: அமர்தியா சென்

காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை வேண்டும் என்று பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமர்த்தியா சென் அளித்த பேட்டியில், மக்கள் எதிர்பார்த்ததை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லாத காரணத்தினால் இதுபோன்ற நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் சரியான தலைவர் நியமிக்கப்பட்டவுள்ளார் என்று நான் கேள்விப்பட்டேன்.
காங்கிரஸ் கட்சியின் நோக்கம் மற்றும் தலைவர் யார் என்பதை மக்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அப்போது தான் காங்கிரஸ் கட்சியால் தேர்தல் நேரத்தில் ஜொலிக்க முடியும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment