27.12.13

பேச்சைக் குறைத்து ஆயுளைக் கூட்டுவோம்


பேசுவதைக் குறைத்துக் கொண்டால் எவ்வாறு கதிர்வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஆம். செல்போனில் பேசுவதைக் குறைத்துக் கொண்டால் கதிர்வீச்சில் இருந்து நிச்சயம் தப்பித்துக் கொள்ளலாம்.
அதாவது, செல்போன் பேசும் போது அதில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்குகின்றன. இதனால் மூளை மற்றும் தலைப் பகுதிகளில் ஏராளமான பிரச்னைகளும், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுபோன்ற அபாயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் செல்பேசியில் மணிக்கணக்கில் பேசுவதைத் தவிர்க்கலாம்.
ஆனால், நீங்கள் செல்போன் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் கையில் வைத்திருக்கும் செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும்.
நம்மூர்களில் அதிகரித்து வரும் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் தான் சின்னஞ்சிறு குருவி வகைகள் காணாமல் போய்விட்டன என்பதை மனிதன் மிக தாமதமாகவே அறிந்து கொண்டுள்ளான். ஆனாலும், அதற்காக எந்த முயற்சியையும் அவன் எடுக்கப்போவதில்லை.
எப்படியாகினும், செல்போன் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழி முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
செல்பேசியில் பேசுவதை முடிந்த அளவுக்கு தவிருங்கள். அலுவலகம் மற்றும் வீடுகளில் லேண்ட்லைனைப் பயன்படுத்தலாம். மேலும், ஹெட் போன் போன்றவற்றையும் பயன்படுத்துவதால் பாதிப்பு குறையும்.
நண்பர்களுடன் வீண் அரட்டை அடிக்க வேண்டும் என்றால், அதற்கு குறுஞ்செய்தி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்க வேண்டாம்.
செல்பேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம். அவ்விடங்களில் கதிர் வீச்சு பாதிப்பு அதிகம் ஏற்படும்.
தூங்கும் பொழுது போனை அருகிலேயோ, தலைக்கு அருகிலோ வைத்து கொண்டு தூங்கும் பழக்கத்தை உடனடியாக விட்டுவிடுங்கள். செல்பேசி என்றில்லை, எந்த எலக்ட்ரானிக் பொருளையும் தலைக்கு அருகில் வைக்காதீர்கள்.
ஒருவரை நாம் செல்பேசியில் அழைக்கும் போது அவர் பேச எடுத்தவுடன் காதில் வையுங்கள். ரிங் போகும் போது கையில் வைத்து அதனை பார்த்துக் கொண்டிருப்பது நல்லது. ரிங் போகும் போதுதான் அதிக கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுகிறது.
கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
செல்பேசியில் பேசும் பொழுது கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். அதிகம் மூடியபடி பேசினால், கதிர்வீச்சு அதிகமாகத் தேவைப்படும் நிலை ஏற்படலாம்.

No comments:

Post a Comment