6.12.13

இங்க என்ன சொல்லுது’



‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் கவுரவ வேடத்தில், சிலம்பரசன்–ஆண்ட்ரியா
விண்ணைத்தாண்டி வருவாயா, நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த வி.டி.வி.கணேஷ் கதை நாயகனாக நடித்துள்ள படம், ‘இங்க என்ன சொல்லுது.’ படத்தில் அவருக்கு ஜோடியாக மீராஜாஸ்மின் நடித்து இருக்கிறார்.
கவுரவ தோற்றத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், சிலம்பரசன் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். கதையை நகர்த்தி செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் வருகிறார்.
மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நகைச்சுவையுடன் எடுக்கப்படும் இந்த படத்தில் பாண்டியராஜன், மயில்சாமி, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், பட தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரும் நடித்துள்ளனர். தரண் இசையமைத்து இருக்கிறார்.
வாட்டாக்குடி இரண்யன், யூத் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை செல்வா என்று மாற்றிக்கொண்டு இந்த படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்.

No comments:

Post a Comment