6.12.13

'மோடிவித்தை ஜெயித்தது' பா.ஜனதா தொண்டர்கள் மகிழ்ச்சி



புதுடெல்லி,
அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக 5 மாநில சட்டசபை தேர்தல் அமைந்தது. அந்த வகையில் இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.
பாரதீய ஜனதா இந்த தேர்தலில் தனது பலத்தை காட்டுவதில் தீவிரம் காட்டியது. அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை களத்தில் இறக்கியது. அவர் மிசோரம் தவிர்த்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மத்திய காங்கிரஸ் ஆட்சி பற்றியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதற்கு அவ்வப்போது காங்கிரஸ் தலைவர்களும் பதிலடி கொடுத்தனர். 5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா எதிர்பார்ப்புப்படி மோடி வித்தை ஜெயிக்காது என விமர்சித்தனர்.
ஆனால் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பாரதீய ஜனதா அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றிருப்பதும், டெல்லியில் தனிப்பெரும் கட்சியாக வந்திருப்பதும் அந்தக் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து பாரதீய ஜனதா தொண்டர்கள், 'மோடி வித்தை ஜெயித்து விட்டது. 3 மாநிலங்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த முடிவே பிரதிபலிக்கும்' என கூறினர்.

No comments:

Post a Comment