6.12.13

மனித உறவுகளின் மேன்மையை சொல்லும் பாலுமகேந்திராவின் ‘தலைமுறைகள்’

மூன்றாம் பிறை, மூடுபனி, வீடு, சந்தியாராகம் போன்ற தரமான கதையம்சம் உள்ள படங்களை தமிழ் பட உலகுக்கு வழங்கிய பாலுமகேந்திரா, நீண்ட இடைவெளிக்குப்பின், ‘தலைமுறைகள்’ என்ற படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்தும் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:–
‘‘மனித உறவுகளின் மேன்மையை சொல்லும் படம் இது. இதில், நான் தாத்தாவாக நடிக்கிறேன். என்னுடன் எஸ்.சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் கார்த்திக், வினோதினி, ஷக்தி, ரெயில் ரவி, தில்லை பெருமாள், ஆர்யன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
டைரக்டர் எம்.சசிகுமார் படத்தை தயாரித்திருப்பதுடன், கவுரவ வேடத்தில் நடித்தும் இருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஈரானிய–கொரிய படங்களை பார்த்து எத்தனை நாள் நாம் வாய் பிளந்து இருப்பது? நாமும் அதுபோல் ஒரு படம் டைரக்டு செய்ய வேண்டும் என்று உருவாக்கிய படம்தான் இது.’’

No comments:

Post a Comment