22.12.13

உடல் பருமன் கூடினால் கல்லீரல் புற்றுநோய் வரலாம்

சர்வதேச ஜீரண ஆரோக்கிய தினம் ஆண்டுதோறும் மே 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச ஜீரண ஆரோக்கிய தினத்தின் நோக்கம் கல்லீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தடுத்தல், கண்டறிதல் ஆகும். புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றாவது பெரிய பாதிப்பாக கல்லீரல் புற்றுநோய் உள்ளது.
உலகம் முழுவதும் இதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற புற்றுநோய்கள் போல் இல்லாமல் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் இறப்பு சதவீதம் 1:1 என்ற அளவில் உள்ளது.
உடல் பருமன், சர்க்கரை மற்றும் ஹெபடைடீஸ் பி மற்றும் ஹெபடைடீஸ் சி ஆகியவை காரணமாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. கொழுப்பினால் கல்லீரல் வீக்கம் அதிகரிப்பதாலும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது.

hghhh

உலக மக்கள் தொகையில் 12இல் ஒருவர் ஹெபடைடீஸ் பி மற்றும் ஹெபடைடீஸ் சி நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக முழுவதும் 50 கோடி மக்கள் ஹெபடைடீஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
உலக கேஸ்ட்ரோஎன்டராலஜி அமைப்பின் இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி கூறுகையில், உலகம் முழுவதும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மது குடிப்பதால் மட்டும், கல்லீரல் புற்றுநோய் வரும் என்று சொல்ல முடியாது. உடல் பருமனாலும் கல்லீரல் புற்றுநோய் வரக்கூடும். ஹெபடைடஸ் பி தடுப்பூசி போட்டு கொண்டால், கல்லீரல் புற்றுநோயை தடுக்க லாம் என்றார்.

No comments:

Post a Comment