22.12.13

முரண்பாடான கூட்டணி: பாஜக கிண்டலுக்கு காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸின் முரண்பாடான கூட்டணி குறித்து பாஜக விமர்சனம் செய்ததற்கு எடியூரப்பாவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லியில் ஆதரவு, ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு பிகாரில் ஆதரவு என்ற காங்கிரஸின் செயல்பாடு முரண்பாடாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி டுவிட்டரில் வியாழக்கிழமை கருத்து தெரிவித்திருந்தார்.
பாஜகவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதை பாஜகவினர் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது சனிக்கிழமை டுவிட்டரில் பதில் கூறியுள்ளார்.
மேலும், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் செüதாலா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பதையும் பாஜக நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment