22.12.13

ஒசூர் ஐ.டி.ஐ. மகளிர் அணி ஒட்டு மொத்த சாம்பியன்

தருமபுரியில் நடைபெற்ற கோவை மண்டல அரசு ஐடிஐ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஒசூர் தொழில் பயிற்சி நிலைய அணி வென்றது.
தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் கோவை மண்டல அரசு தொழில் பயிற்சி நிலையங்களுக்கு இடையே மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் கடந்த மூன்று நாள்கள் நடைபெற்றது.
கடைசி நாளான சனிக்கிழமை மாணவிகளுக்கு வாலிபால், பாட்மிண்டன் உள்ளிட்ட குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் நடைபெற்றன.
இதில் வாலிபால் போட்டியில் கோவை அணியும், பாட்மிண்டனில் சேலம் அணியும் வெற்றி பெற்றன. மாணவிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சேலம் மகளிர் ஐடிஐயைச் சேர்ந்த டி.மொபினாவும், 200 மீட்டரில் ஒசூர் ஐடிஐ எஸ்.லட்சுமியும், நீளம் தாண்டுதலில் தருமபுரி ஐடிஐ கே.சோனியாவும் முதலிடம் பிடித்தனர்.
ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஒசூர் அரசு ஐடிஐயும், தனிநபர் சாம்பியனாக தருமபுரியைச் சேர்ந்த கே.சோனியாவும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment