24.12.13

ரூ.1 கோடி மோசடி: போலீஸ் கமிஷனரிடம் டி.ராஜேந்தர் புகார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை புகார் அளிக்க வந்த திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர்.
தன்னிடம் ரூ.1 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் திங்கள்கிழமை புகார் அளித்தார்.

காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், குறள் டி.வி. கிரியேஷன் நிறுவனம் சார்பில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவத்திடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் அந்த மனு தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
எனது மகன் சிலம்பரசன் பாடி, தயாரித்துள்ள "லவ் ஆன்த்தம்' (கஞயஉ அசபஏஉங) என்ற இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம்.
இது தொடர்பாக ஏகானை பாட வைப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ராம்ஜி சோமா, கனடாவைச் சேர்ந்த தல்வீர்ந்தர்பாத் என்ற டெர்ரி பாத் ஆகிய இருவரையும் சந்தித்தோம்.
பின்னர் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி, பாடகர் ஏகானை ஆல்பத்தில் பாட அழைத்து வர வேண்டும், அவரை அழைத்து வர முடியாவிட்டால் நாங்கள் கொடுக்கும் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என ஒப்பந்ததம் செய்து கையெழுத்திட்டோம்.
இதற்காக அவர்கள் கேட்ட பணத்தை நான், டெபாசிட் செய்தோம். ஆனால் ஏகான், இசைப் பதிவுக்கு வரவில்லை.
எங்களிடம் பணத்தை
வாங்கிய டெர்ரி பாத்திடமும், ராம்ஜி சோமாவிடமும் ஏகான் வராமல் இருப்பது குறித்து கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தையும் அவர்கள் திருப்பித் தராமல் இழுத்தடித்தனர்.
இதனால் ஏகானை நேரடியாகவே தொடர்பு கொண்டு, அவரை எங்களது இசை ஆல்பத்தில் பாட வைத்தோம். இதன் பின்னரே டெர்ரி பாத்தும்,ராம்ஜியும் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தைத் திருப்பிக் கேட்டு அனுப்பிய வழக்குரைஞர் நோட்டீûஸயும் அவர்கள் பெறாமல், திருப்பி அனுப்பியுள்ளனர்.
எனவே அவர்கள் இருவர் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்து, பணத்தைத் திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் டி.ராஜேந்தர்.

No comments:

Post a Comment