24.12.13

இந்தியன் வங்கியில் கூடுதலாக 3,000 எழுத்தர்கள் நியமனம் தேவை: ஊழியர் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தல்

இந்தியன் வங்கிகளில் கூடுதலாக 3,000-ம் எழுத்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்  என இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன்(தமிழ்நாடு) மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இம்மாநில மாநாட்டின் 2-வது நாளான திங்கள்கிழமை அகில இந்திய இந்தியன் வங்கி ஊழியர் சங்க உதவித்தலைவர் தபன்தாஸ் சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து நிர்வாகிகள் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இந்தியன் வங்கியில் அதிகரித்து வரும் வேலைப்பளுவை சமாளிக்க உடனடியாக கூடுதலாக 3,000-ம் எழுத்தர்கள், 1000-ம் கடைநிலை ஊழியர்கள் மற்றும் துப்புரவாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.நிரந்தர பணிகளை வெளிஆட்கள் மூலம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.  வங்கி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து சங்கத்தினர் அழைத்து நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
பணியின்போது இறக்கும் ஊழியர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஜனவரி 20,21 தேதிகளில் வங்கி ஊழியர்களுக்கான 10-வது ஊழிய ஒப்பந்தந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 28தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வங்கித்துறை சீர்திருத்தங்களைக் கண்டித்தும், அகில இந்திய அளவில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் வேலை நிறுத்தத்தை இன்று(டிசம்பர்23) வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவை வெற்றிகரமாக நிறைவேற்ற சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment