11.12.13

யாசின் பட்கலுக்கு 10 நாள் போலீஸ் காவல்



இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் யாசின் பட்கல் மற்றும் அசதுல்லா அக்தர் ஆகியோரை இம்மாதம் 20ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2010ஆம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை சீர்குலைக்கும் வகையில், பழைய தில்லி 3ஆவது நுழைவு வாயில் பகுதி ஜும்மா மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.
அப்போது, 2008ஆம் ஆண்டு தில்லி கரோல் பாக் பகுதியில் நிகழ்ந்த தொடர் குண்டு வழக்கில், இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து பட்கல் மற்றும் அக்தர் ஆகிய இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி வழங்கி நீதிபதி தயா பிரகாஷ் உத்தரவிட்டார்.
2008இல் செப்டம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர். 135 பேர் காயமடைந்தனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் பட்கல், அக்தர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment