11.12.13

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 3.46 அதிகரிப்பு



சமையல் எரிவாயு விலை செவ்வாய்க்கிழமை சிலிண்டருக்கு ரூ. 3.46 அதிகரிக்கப்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களுக்கு 9 சதவீத அளவுக்கு கமிஷன் உயர்த்தியதைத் தொடர்ந்து எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.410.50 க்கு விற்கப்பட்டு வந்தது. விலை உயர்வுக்குப் பிறகு சிலிண்டருக்கு ரூ.413.96 ஆக அதிகரித்துள்ளது.
5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் தில்லியில் தற்போது ரூ.353-க்கு விற்கப்படுகிறது. இந்த சிலிண்டருக்கான விநியோகஸ்தர் கமிஷன் ரூ.1.73 முதல் ரூ.20.36 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment