11.12.13

22 புதிய சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்க 4 மாதம் கெடு: உச்ச நீதிமன்றம்



அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, நாடு முழுவதும் 22 சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களை 4 மாதங்களில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கெடு விதித்துள்ளது.
இதை செய்யத் தவறினால் மாநில தலைமைச் செயலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று 2011ஆம் ஆண்டிலிருந்து நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதை செயல்படுத்தாததற்கு அதிகாரிகள் காரணங்களையும், விளக்கங்களையும் அவ்வப்போது அளித்து வருகின்றனர். ஆனால் நீங்கள் (அதிகாரிகள்) நினைத்தால் ஒரே நாளில் அந்த உத்தரவை செயல்படுத்திவிடலாம்' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment