26.12.13

உத்தம வில்லன் படத்தில் காஜல் அகர்வாலின் சம்பளம் எவ்வளவு?


விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிறகு கமல் ஹாசன், அவருடைய நண்பரான நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கமல் ஹாசனின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேஸி மோகன் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
காமெடி கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவைத் தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால், தெலுங்கில் சரித்திர படங்களில் அவர் பிசியாக இருப்பதால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்க தற்போது காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் சம்மதம் கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார். தெலுங்கில் சீனியர் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என வீறாப்பாக கூறிவிட்டு, தமிழில் மட்டும் சீனியர் நடிகர்களுடன் நடித்தால் தெலுங்கு சீனியர் நடிகர்களின் அதிருப்தியை சந்திக்க வேண்டும் என்ற காரணத்தால் முதலில் நடிக்க தயங்கினாராம். ஆனால் லிங்குசாமி ரூ.2 கோடி சம்பளம் தருவதாக சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.
காஜல் அகர்வால் நடித்த படங்களில் துப்பாக்கி மட்டும்தான் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதற்குள் ரூ.2 கோடி சம்பளமா என கோலிவுட் அதிர்ச்சியடைந்துள்ளது.

No comments:

Post a Comment