26.12.13

அட்டகத்தி நாயகனை பாராட்டிய விஜய்சேதுபதி


அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.ரமேஷ், இமானுவேல் தயாரிக்கும் படம் “வாராயோ வெண்ணிலாவே”.

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் – ஹரிப்ரியா – சானியா ஷேக் ஆகியோர் கதாநாயகன், கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானபாரதி, சரித்திரன்,புதுமுகம் சரவணன்,நமோ நாராயணன்,கானாபாலா,சோனியா ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்துக்கு ராணா ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது
“உன்னிடம் ஒன்றை
கொஞ்சம் கேட்க
உம் என்று நீ
சொல்வாயா ? – என்ற பாடல் காட்சியில் தினேஷ் – சானியாஷேக் பங்கேற்க படமாக்கப்பட்டது.
சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்த போது யதேச்சையாக அங்கு வந்த விஜய் சேதுபதி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சி ஒன்றை பார்த்து மனதார பாராட்டி இருக்கிறார்.
என்ன தினேஷ் அட்டகத்தியில வில்லேஜ் கேரக்டர் இந்த படத்தில் ஸ்டைலிஷ் தினேஷ் ஆக மாரிடீங்க என்று தினேஷையும் இயக்குனர் சசிதரனையும் பாராட்டி இருக்கிறார்.

No comments:

Post a Comment