26.12.13

இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீண்ட காலம் வாழும் மனிதர்



இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்து வரும் மனிதராக பிரிட்டனைச் சேர்ந்த ஜான் மெக்காஃபர்டி கின்னஸ் சாதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் மிடில்செக்ஸ் பகுதியில் உள்ள ஹேர்ஃபீல்டு மருத்துவமனையில், கடந்த 1982ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி மெக்காஃபர்டி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவருக்கு தற்போது 71 வயதாகிறது.
அவ்வப்போது உரிய பரிசோதனைகளைச் செய்து கொள்ளும் அவர் நலமுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 31 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதற்கு முன்பாக அமெரிக்காவைச் சேர்ந்த டோனி ஹியூமேன் என்பவர் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு 30 ஆண்டுகள், 11 மாதம், 10 நாள்கள் வாழ்ந்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உலகிலேயே மிக நீண்ட காலம் வாழ்ந்து வரும் கின்னஸ் சாதனைக்கான சான்று ஜான் மெக்காஃபர்டிக்கு வழங்கப்பட்டது.
இது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது என்று ஜான் மெக்காஃபர்டி கூறினார்.

No comments:

Post a Comment