26.12.13

நகைச்சுவை விருந்து படைக்க வரும் “அது வேற இது வேற”


களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”

இந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சானியாதாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சாகருப்பு, சிங்கமுத்து, பொன்னம்பலம்,தளபதிதினேஷ்,தியாகு, ஷகீலா, போண்டாமணி, சுப்புராஜ்,வேல்முருகன், யோகிபாபு,ஆகியோர் நடிக்கிறார்கள். இமான் அண்ணாச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக வளம்வருகிறார். ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். தாஜ் நூர் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை,வசனம், எழுதி இயக்குகிறார் M.திலகராஜன். படம் பற்றி இயக்குனர்…..
இந்த படத்தில் லாஜிக் என்று ஒன்றை தேடினால் கிடைக்காது.
சினிமாவில் வழக்கமாக எல்லோரும் சொல்கிற வார்த்தை ..நல்ல கதை ஜெயிக்கிற விஷயங்கள் லாஜிக் எல்லாம் பக்காவாக இருக்கும் யாரும் கேள்வியே கேட்க முடியாது என்று.
நான் சொல்கிறேன் என் படத்தில் லாஜிக் எதுவும் கிடையாது நகைச்சுவை தான் என் குறிக்கோள் என்பதால் படத்தில் பல இடங்களில் சிரிப்பு வயிற்றை பதம் பார்க்கும்.
இமான் அண்ணாச்சி – கஞ்சாகருப்பு இருவரும் நகைச்சுவையில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.
சானியாதாரா கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வருகிறது.

No comments:

Post a Comment