26.12.13

பீட்சா ரீமேக்கில் அஜித் பட நாயகி


பீட்சா படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார் பிஜாய் நம்பியார்.

விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பீட்சா’. இப்படத்தை குறும்பட இயக்குனரான கார்த்திக் சுபாராஜ் இயக்கியிருந்தார். வித்தியசாமான திரில்லர் கதையுடன் வெளிவந்த இந்த படம் சென்ற வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.
இந்நிலையில் பீட்சா படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. தற்போது படம் தொடர்பான வேலைகளை ஆரம்பித்துவிட்டார் பிஜாய் நம்பியார். இவர்தான் விக்ரம், ஜீவாவை வைத்து ‘டேவிட்’ படத்தை இயக்கியவர். ஏற்கெனவே இவர், பீட்சா படத்தின் இந்தி ‌ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை ரூ.1.10கோடி கொடுத்து வாங்கிவிட்டார். தமிழில்
விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடித்த வேடத்தில் இந்தியில் அக்‌ஷய் ஓபராய்-பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கவிருக்கிறார்கள். பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் இந்த பார்வதி ஓமனக்குட்டன்.

No comments:

Post a Comment