26.12.13

அமெரிக்கா, கனடாவில் கடும் பனிப்புயல்



அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலுக்கு 11 பேர் உயிரிழந்தனர்.
பனிப்புயல் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு கிளம்பவிருந்த 7,000க்கும் அதிகமான விமானங்கள் தாமதாகப் புறப்பட்டுச் சென்றன.
இதனால் சிக்காகோ, நியூயார்க், வாஷிங்டன் மாகாணங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாடத்திற்காக புறப்பட்டவர்களின் பயணங்கள் தடைப்பட்டன.
கனடாவில் பனிப்புயல்: அதேபோன்று கனடாவில் ஏற்பட்ட பனிப்புயலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 90,000க்கும் அதிகமான வீடுகளில் உள்ள மக்கள் மின்சாரம் இன்றி தவித்துவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அங்கு நிலவிய உறைய வைக்கும் தட்பவெப்பத்திலிருந்து தப்பிக்க, ஜெனரேட்டரை பயன்படுத்தியதால் ஏற்பட்ட கார்பன் மோனாக்ûஸடு வாயுக்கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
டொராண்டோ நகரத்தில் ஜெனரேட்டர் பயன்பாட்டினால் ஏற்பட்ட கார்பன் மோனாக்ûஸடு வாயுக்கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட 11 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நகர மேயர் ராப் ஃபோர்ட் தெரிவித்தார்.
பிரிட்டன், பிரான்ஸில் புயல்: பிரிட்டனில் புதன்கிழமை ஏற்பட்ட கடும் புயல் மற்றும் கன மழைக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
அங்கு கிறிஸ்துமஸ் தினத்துக்கான கொண்டாட்டங்கள் தடைப்பட்டதோடு, 10,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சுமார் 1.50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ரஷியாவில் விபத்துக்குள்ளான சரக்குக் கப்பல் ஒன்றின் மாலுமி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தப் புயல் பாதிப்பால் பிரான்ஸ், இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் விமான, தரை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment