26.12.13

வடக்கிற்கும் தெற்கிற்கும் காதல்!


தமிழ் சினிமா பல வித்தியாசமான காதல்களைப் பார்த்துவிட்டது.

இது லேட்டஸ்டாக தொடங்கியிருக்கும் காதல். தமிழ் பையனுக்கும் வடக்கத்திய பெண்ணுக்கும் ஏற்படும் காதல். இதை மையப்படுத்தி வடக்கும் தெற்கும் என்ற பெயரில் ஒரு சினிமா தயாராகிக்கொண்டிருக்கிறது.
கதாநாயகனாக அம்ரிஷ், கதாநாயகியாக பிரியங்கா நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் போஸ் பாண்டி நடிக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் மட்டும் புதுமுகமில்லை. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள் என இந்தப் படத்தில் பணியாற்றும் நிறைய பேர் புதுமுகங்கள். படத்தை ஜி.இராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
படத்திற்கான படப்பிடிப்பு வேலூர் அமிர்தி பாரஸ்ட், திருத்தணி, சென்னை ஆகிய பகுதிகளில் நடந்துள்ளன. ஒரு பாடல் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment