26.12.13

‘வீரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

அஜித்,  தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமப்பில் சிவா இயக்கியுள்ள படம் ‘வீரம்’.
இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அஜித் நான்கு தம்பிகள் மேல் பாசம் வைத்துள்ள கிராமத்து இளைஞனாக வருகிறார். இதில் அஜித் காமெடியும் செய்கிறாராம்.
ரஜினியின் முரட்டுக்காளை சாயலில் குடும்ப சென்டி மென்ட் படமாக உருவாகியுள்ளதாம். சென்சாருக்கு சென்ற 'வீரம்' படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்ததோடு, படத்தையும் பாராட்டி இருக்கிறார்கள்.
வீரம் படம் 1800 பிரிண்டுகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித்குமார் நடித்த படங்களிலேயே மிக அதிக அளவில் பிரிண்ட் போடப்படும் படம் இதுதான். சில நாட்களுக்கு முன் வெளியான ‘வீரம்’ படத்தின் பாடல்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment