18.12.13

வரும் 20 தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்

18 December 2013 11:17 AM IST


குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 20 தேதி சென்னை வருகிறார். இதுகுறித்து குடியரசுதலைவர் மாளிகையில் இருந்து வரும் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

 ஐதராபாத்தில் இருந்து காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர்  இங்கு 2 விழாங்களில் கலந்து கொள்வார் என்றும் பின்னர் மாலை 4 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.
குடியரசுதலைவர் சென்னை வருகையை  முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment