18.12.13

பிக் பாஸ் 7: நடிகை சோபியாவை துடைப்பத்தால் அடித்து, அசிங்கமாக திட்டிய நடிகர் கைது

பிக் பாஸ் 7: நடிகை சோபியாவை துடைப்பத்தால் அடித்து, அசிங்கமாக திட்டிய நடிகர் கைது

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் அர்மான் கோஹ்லி சக போட்டியாளரும், நடிகையுமான சோபியா ஹயாத்தை தாக்கி, அசிங்கமகா திட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகியும், நடிகையுமான சோபியா ஹயாத் கலந்து கொண்டார். ஆனால் சோபியா பிக் பாஸ் வீட்டில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த புதன்கிழமை மும்பை சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் பிக் பாஸ் போட்டியாளர் அர்மான் கோஹ்லி மீது புகார் கொடுத்தார்.
தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அர்மான் துடைப்பத்தால் தன்னை தாக்கியதாகவும், கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் லோனாவால காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சோபியாவை உடல் ரீதியாக துன்புறுத்தியதற்காக அர்மான் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தவற்றை தெரிந்துகொள்ள போலீசார் வீடியோ பதிவுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment