18.12.13

சீன கடற்பகுதியில் அமெரிக்க போர் கப்பல் வந்ததை இன்று உறுதிபடுத்தியது சீனா

தென் சீன கடற்பகுதியில் சீன கடற்படை கப்பல் மற்றும் அமெரிக்க போர் கப்பல் இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்தது என்பதை இன்று சீனா உறுதி படுத்தியுள்ளது.
முன்னதாக வாஷிங்டனில் இருந்து வந்த அறிக்கையில் அமெரிக்க ஏவுகணைகளை வழிநடத்த இந்த கப்பல் கடல் பகுதியில் சுற்றிதிரிந்ததாகவும் சீன போர்கப்பலுடனான மோதலை தவிர்த்ததாகவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் சீன கடற்படை அமரிக்க போர் கப்பல் மீது தனது கடுமையான நெறிமுறைகளை கையாள தொடங்கியதும் அமெரிக்கா மழுப்பலான பதிலை தெரிவிக்க வேண்டிய கட்டயம் ஏற்பட்டது. என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment