20.12.13

அன்பழகன் பிறந்தநாள்: கருணாநிதி நேரில் வாழ்த்து

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று கட்சித் தலைவர் கருணாநிதி வாழ்த்துகளை தெரிவித்தார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று கட்சித் தலைவர் கருணாநிதி வாழ்த்துகளை தெரிவித்தார்.

முன்னதாக, தமது பிறந்தநாளான வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு காலை 7.30 மணிக்குச் சென்ற அன்பழகன், அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள தமது வீட்டில் கேக் வெட்டி, குடும்பத்தாருடன் கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி மித்ரா மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று, குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடைகளை அன்பழகன் வழங்கினார்.
கருணாநிதி வாழ்த்து: திமுக தலைவர் கருணாநிதி, க.அன்பழகன் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். கருணாநிதியுடன் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் சென்று வாழ்த்துக் கூறினர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் நேரு, ரகுமான்கான், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பலர் வாழ்த்து கூறினர்.
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனின் 92-வது பிறந்த நாளில் வியாழக்கிழமை சென்னையில் அவரது வீட்டுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து வாழ்த்தினார் திமுக தலைவர் மு. கருணாநிதி.

No comments:

Post a Comment