20.12.13

ரம்மி ஜனவ‌ரி 24 வெளியாகிறது

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ரம்மி டிசம்பர் 27ஆம் தேதிக்குப் பதில் ஜனவ‌ரி 24ஆம் தேதி வெளியாகிறது.
FILE

ரம்மி படத்தை ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் தயா‌ரித்துள்ளது. இவர்கள்தான் ‌ஜி.வி.பிரகாஷின் மதயானைக்கூட்டம் படத்தின் விநியோக உ‌ரிமையையும் வாங்கியுள்ளனர். அப்படம் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் வெளியீடாக வருகிறது. அடுத்த இரு தினங்களில் ரம்மி வெளிவந்தால் இரு படங்களின் வசூலும் பாதிக்கப்படும். திரையரங்குகள் கிடைப்பதும் சிரமம்.

இதனை கருத்தில் கொண்டு பட வெளியீட்டை ஜனவ‌ரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். ஜனவ‌ரி 10 வெளியாகும் வீரம், ‌ஜில்லா படங்களின் பாதிப்பிலிருந்தும் இதன் மூலம் தப்பிக்க முடியும். 

ரம்மியில் விஜய் சேதுபதியுடன் இனிகோ பிரபாகரன், ஐஸ்வர்யா, சூ‌ரி, காயத்‌ரி நடித்துள்ளனர். டி.இமான் இசை. அறிமுக இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதுவொரு ஃபேமிலி த்‌ரில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment