20.12.13

ஹிந்தியில் காஞ்சனா - லாரன்ஸ் இயக்குகிறார்

ராகவா லாரன்ஸின் காமெடி ஹாரர் படமான காஞ்சனா ஹிந்தியில் ‌ரீமேக்காகிறது. ‌ரீமேக் உ‌ரிமையை தூஷார் கபூர் வாங்கியுள்ளார்.
FILE

முனி படத்தின் இரண்டாம் பாகமாக லாரன்ஸ் நடித்து இயக்கிய படம்தான் காஞ்சனா. சரத்குமா‌ரின் திருநங்கை கெட்டப்பும், கோவை சரளாவின் சரளமான காமெடியும் படத்தை தமிழிலும், தெலுங்கிலும் வெற்றிப் படமாக்கியது. தற்போது முனி 3 கங்கா என்ற பெய‌ரில் மூன்றாவது பாகத்தை லாரன்ஸ் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் லாரன்சுடன் தாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா நடித்து வருகின்றனர்.

காஞ்சனா படம் வெளிவரும் முன்பே, அந்தப் படத்தை ஹிந்தியில் ‌ரீமேக் செய்ய பலர் ஆர்வம் காட்டுவதாக லாரன்ஸ் தெ‌ரிவித்திருந்தார். இப்போது ‌ரீமேக் உ‌ரிமையை துஷார் கபூர் வாங்கியுள்ளார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது. ‌ரீமேக்கையும் லாரன்ஸே இயக்குவார் என தெ‌ரிகிறது.

படத்தில் நடிப்பவர்கள் இன்னும் உறுதியாகவில்லை. லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய்தேவ் கான் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment