20.12.13

மூல நோய்-Hemorrhoids

மூல நோய் என்பது மலக்குடலின் மலத்துவாரத்தில் நரம்புகள் வீக்கமடைவதால் ஏற்படுகின்றது. (பெருங்குடல் மிக குறைந்த பகுதி). இவை சில நேரங்களில் மலத்துவாரத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டும் காணப்படலாம். இதை பையில்ஸ் என்றும் அழைக்கலாம். குதவாய் வீக்கமடைவதன் விளைவாக கூடிக்குறையும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டு மலவாசலில் பரந்து வளர்கின்றன. இவை கட்டிகளோ அல்லது ஏதும் வளர்ச்சியோ இல்லை. மூல நோய் ஏற்படுவதற்கு பின்வருவனவும் காரணமாகின்றது.

 நீண்ட காலமாக அதிகமாக இருந்தல் அல்லது நிற்றல்
 கடுமையான இருமல்
 கடினமான பொருட்களை தூக்குதல்
 மலம் கழிக்கும் போது முக்குதல் (மலச்சிக்கல் அல்லது வயிற்றோட்டம் போன்ற நிலைகளும் இதை மேலும் மோசமாக்கலாம்). அதே போன்று வேறு சில காரணங்களும் மூல நோயை ஏற்படுத்தலாம்.
 உடற்பருமனாக இருத்தல்(அதிக நிறை)
 உடற்பயிற்சியின்மை
 கல்லீரல் பாதிப்பு
 உணவு ஒவ்வாமை
 உண்ணும் உணவில் நார்ச்சத்து பற்றாக்குறை.

மூல நோய் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ நேரத்திலும் அதற்கு பின்னும் ஏற்படுவது மிகவும் பொதுவான ஒன்றாகும். வளரும் கருவினால் உண்டாகும் ஓமோன் மாற்றம்இ அழுத்தம் போன்றன காரணமாக அமையலாம். கணக்கெடுப்பின்படி இன் நோய் சிலருக்கு 50 வயதில் ஆரம்பித்து 70 வயது வரை கூடி பின் குறைந்து விடுகிறது.
மூல நோயின் அறிகுறிகள்:

 கடிக்கும் தன்மை
 எரியும் தன்மை
 வலி
 அழற்சி
 வீக்கம்
 உறுத்தல் அல்லது எரிச்சல்
 கசிந்தொழுகுதல்
 இரத்தப்போக்கு ( இது இளம் சிவப்பு நிறத்தில் மலம்கழிக்கும் நேரங்களில் ஏற்படும்)

அது போன்று ஜீரண அமைப்பின் ஒழுங்கற்ற தன்மையையும் இது குறிக்கும். மல குடல் இரத்தப்போக்கை ஏதும் கடுமையான வருத்தத்தால் தான் ஏற்படுகின்றன என எண்ணத்தேவையில்லை. மூல நோயில் பல வகைகள் உண்டு. அவை ஏற்பட்டுள்ள பகுதிஇ தீவிரத்தன்மைஇ அசௌகரியம்இ மோசமாகும் தன்மை போன்றவற்றைக்கொண்டு வேறுபடுத்தலாம்.

வெளிப்புறம் 
இது மலவாய் துவாரத்தின் துவக்கத்தில் தோலின் கீழ் அபிவிருத்தியாகும். இவை கடின கட்டி போன்று தோன்றுவதோடு வலிமிக்க வீக்கம் காணப்படும். சிலசமையம் இரத்த உறைவு படிவங்கள் காணப்படும். வெளிப்புற மூல நோய் வீக்கம் காணப்படும் போது அந்த சவ்வு உள்ள இடம் நீல நிறமாக அல்லது ஊதா நிறமாக மாற்றமடையும். இவ் வகையான மூல நோய் இளம் வயதினருக்கே அதிகமாக ஏற்படும். அதோடு முகவும் வலி மிக்கதாக காணப்படும்.

உற்புறம் 
இது மலக்குடலின் உற்புறமாகக் காணப்படும். பெருங்குடலின் ஆசனவாய் மேலே அமைந்திருப்பதால் இதனால் ஏற்படும் வலி குறைவாக காணப்படும் ஏனெனில் மல குடல் சவ்வுகளில் நரம்பு மண்டலங்கள் இல்லை. எவ்றாயினும் இவை இரத்தப்போக்கை உருவாக்கும். இளம் சிவப்பு நிற இரத்தம் காணப்படும்.

PROLAPSED 
இது ஒரு உற் புற மூல நோய் சரிந்துஇ முன்னால் நீடிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்புடையது. இதன் போது சளி வெளியேறல்இ அதிக இரத்தம் வெளியேறல் போன்றன நிகழ்கின்றன. இவ் வகையான மூல நோய் Thrombosed(த்ரோம்போசெத்) மூல நோயாக மற்றமடையலாம். Thrombosed மூல நோய் கட்டிகளாக உருவாகி பதையின் நடுவில் வந்து அடைகிறது இதனால் அதிக வலி ஏற்படுகிறது.

மூல நோய் என்பது ஏன்னோருவரிடமிருந்தோ அல்லது வேறு உயிரினத்திலிருந்தோ தொற்றும் அல்லது பரவும் நோயல்ல. இது ஒருவருக்கான தனி நோயாகும்.

நமது உணவு மற்றும் ஊட்டச்சத்து பழக்கம்களை சிறந்த முறையில் பேணுதலே ஒரு மிக முக்கியமானதாகும். 50-75 மூ மான மக்களுக்கு மூல நோய் காணப்படுகின்றது. இம் மூல வருத்தம் ஒருவருக்கு எவ் வயதுக்கட்டதிலும் ஏற்படலாம். மற்றும் குடும்ப அலகிலிருந்தும் வரலாம் ஆனால் அவை வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையாது.

மூலிகை வைத்தியம்
இந் நோய்க்கான மூலிகை மருந்து தேவைப்படுமாயின் எங்கள் மூலிகை மருத்துவரை நாடுங்கள் உங்களது நிலைகளை பரிசோதித்து /அறிந்து அதற்கேற்றவாறு மருந்துகள் பரிந்துறைக்கப்படும்.

No comments:

Post a Comment