16.12.13

தேசிய ஒற்றுமைக்கான ஓட்டம்: 2500 பேர் பங்கேற்பு

திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய ஒற்றுமைக்கான ஓட்டத்தில்  சுமார் 2500 பேர் பங்கேற்றனர்.
சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒருமைப்பாடு யாத்ரா டிரஸ்ட் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் 565 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கினார்.
டிசம்பர் 15ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினமாகும். சமஸ்தான இணைப்புகளை நினைவுகூரும் வகையில், ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 565 இடங்களில் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் சுமார் 2500 பேர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதை வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் செயலர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.
இந்த ஒற்றுமை ஓட்டத்தில் பாரதிய ஜனதா மாநில இளைஞர் அணி பொதுச் செயலர் கமலக்குமார், நாமக்கல் மாவட்ட பொதுச்செயலர் வழக்குரைஞர் கார்த்திகேயன், மாவட்ட மகளிர் அணி தலைவர் சரஸ்வதி சந்திரசேகரன், மாவட்ட பொதுச் செயலர் சம்பத்குமார், மாவட்டச் செயலர் ஆசிர் பிரான்சிஸ், திருச்செங்கோடு நகரத் தலைவர் டிவி மதியழகன், நகர பொதுச் செயலர் மூர்த்தி, கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment