16.12.13

ஆட்சி அமைப்பதில் "ஆம் ஆத்மி'க்கு குழப்பம்


தில்லியில் ஆட்சி அமைப்பதில் ஆம் ஆத்மி கட்சி குழப்பத்தில் இருப்பதாகவும், ஆட்சி அமைப்பவர்கள் ஆதரவு தரும் கட்சிக்கு நிபந்தனை விதிப்பது மிகவும் வினோதமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தொழுநோய் மற்றும் நுண்ணுயிரி நோய்களுக்கான ஜல்மா தேசிய நிறுவனத்தின் பொன் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது நாள் வரை கனவுலகில் மிதந்து வந்த ஆம் ஆத்மி கட்சியினர் தற்போதுதான் நிஜத்தை உணரத் தொடங்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஆட்சி செய்வதில் அனுபவம் இல்லாததால், ஆட்சிப் பொறுப்பை ஏற்பதை மிகவும் கடினமான ஒன்றாகக் கருதுகின்றனர். ஆட்சி அமைப்பதற்காகவே தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால்தான் காங்கிரஸ் கட்சி எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக ஆம் ஆத்மி கட்சியினர், காங்கிரஸýக்கு நிபந்தனை விதித்திருப்பது வினோதமாகத் தெரிகிறது என்றார் குலாம் நபி ஆஸாத்.

No comments:

Post a Comment