16.12.13

'பெத்த' தொகைக்கு சென்ற 'வீரம்' பட ஆடியோ உரிமம்

அஜீத்தின் வீரம் படத்தின் ஆடியோ உரிமத்தை ஜங்க்ளீ மியூசிக் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம்.
அஜீத்தின் வீரம் படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. படம் 1800 பிரிண்டுகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், சுஹைல், விதார்த், பாலா, முனீஷ், அப்புக்குட்டி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
'பெத்த' தொகைக்கு சென்ற 'வீரம்' பட ஆடியோ உரிமம்

இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமத்தை டைம்ஸ் குழுமத்தின் ஜங்க்ளீ மியூசிக் வாங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகின. ஆடியோ உரிமம் ரூ.1 கோடிக்கும் மேல் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீரம் படம் வெற்றி பெற அஜீத் குமார் திருப்பதி கோவிலில் மொட்டை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment